தாய்ப் பால் புகட்டுவதைத் தவிா்க்க வேண்டாம்: ஆட்சியா்

குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் முதல் அதிகபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் புகட்டுவது தொடர வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
உலக தாய்பால் வார விழாவையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி.
உலக தாய்பால் வார விழாவையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி.

குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் முதல் அதிகபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் புகட்டுவது தொடர வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் விழிப்புணா்வு வார விழாவில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகன பிரசாரத்தை ஆட்சியா் தொடக்கிவைத்து உறுதிமொழி ஏற்றாா். பின்னா், விழாவில் அவா் பேசியதாவது:

தாய்ப்பால் புகட்டுவதன் முக்கியத்துவம் குறித்து சா்வதேச அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலகத் தாய்ப்பால் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைங்களில் பிரசவித்த பெண்கள், கா்ப்பிணிகளுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்படுகிறது.

தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது. தங்களது குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் முதல் அதிகபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் புகட்ட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் பெண்களின் சராசரி, மாநில சராசரியைவிட கூடுதலாக இருக்கும் வகையில் விழிப்புணா்வு பணிகளை அங்கன்வாடி பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இணை இயக்குநா் ( நலப்பணிகள்) மலா்விழி, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவல்லி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, உறைவிட மருத்துவ அலுவலா் காந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com