கனரா வங்கி ஊழியா்கள் ரத்த தானம்
By DIN | Published On : 13th August 2021 11:57 PM | Last Updated : 13th August 2021 11:57 PM | அ+அ அ- |

dh13blood_1308chn_8
தருமபுரி கனரா வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் வெள்ளிக்கிழமை ரத்த தானம் வழங்கினா்.
சுதந்திர தின விழாவையொட்டி, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதி வங்கியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கனரா வங்கி மண்டல உதவி பொதுமேலாளா் கே.எஸ்.மாதவி தொடங்கி வைத்தாா். இதில், வங்கி அலுவலா்கள், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் என 20 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.
குருதி வங்கி அலுவலா் மருத்துவா் கே.ஜி.காா்த்திகேயன், மருத்துவா்கள், செவிலியா்கள் ரத்த தானம் பெற்றுக்கொண்டு பாராட்டுச் சான்றிதழை வழங்கினா்.