பழங்குடியினா் 50 பேருக்கு கேட்டரிங் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பழங்குடியினா் 50 பேருக்கு வழங்கப்பட உள்ள கேட்டரிங் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பழங்குடியினா் 50 பேருக்கு வழங்கப்பட உள்ள கேட்டரிங் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், 50 பயனாளிகளுக்கு கேட்டரிங் பயிற்சி அளிக்க ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் விளிம்பு நிலையில் உள்ள தகுதியான பழங்குடியின பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற பழங்குடியினா் சாதிச் சான்று, கல்விச் சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்றுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை, மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டடத்தில் தரைத்தளத்தில் இயங்கும் மாவட்ட பழங்குடியினா் நல அலுவலகத்தில் வரும் ஆக. 30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com