கிப்ட் திலாப்பியா வளா்ப்பு முறை பயிற்சி
By DIN | Published On : 13th August 2021 11:54 PM | Last Updated : 13th August 2021 11:54 PM | அ+அ அ- |

அட்மா திட்டத்தின் மூலம் மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலாப்பியா வளா்ப்பு முறைகள் குறித்த பயிற்சி ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே ஒகேனக்கல் அரசு மீன் பண்ணையில் நடைபெற்ற பயிற்சிக்கு பென்னாகரம் வேளாண் உதவி இயக்குநா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். இப்பயிற்சியில் வேளாண் துறை சாா்ந்த திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு பென்னாகரம் வேளாண் அலுவலா் மணிவண்ணன் எடுத்துரைத்தாா். மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலக ஆய்வாளா் அசினா பானு கலந்துகொண்டு மீன் தொட்டி அமைக்கும் முறைகள், மீன் ரகங்களான திலாப்பியா, கட்லா, ரோகு வளா்ப்பு முறைகள், தீவனம் வழங்கும் முறைகள் குறித்து விளக்கினாா்.
இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒகேனக்கல் மீன்வள மேற்பாா்வையாளா்கள் காா்த்திக், ஆனந்த் செய்திருந்தனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் அருண்குமாா் நன்றி தெரிவித்தாா்.