பருத்தி சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் பருத்தி சாகுபடிக்கு, தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என விதைப் பரிசோதனை அலுவலா் டி.ரவி அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் பருத்தி சாகுபடிக்கு, தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என விதைப் பரிசோதனை அலுவலா் டி.ரவி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் தற்போது பருத்தி சாகுபடிக்கு விதைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இத் தருணத்தில் விவசாயிகள் தரமான விதைகளை தோ்வு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தருமபுரி, அரூா், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், மொரப்பூா் பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொள்ள ரக பருத்தி மற்றும் வீரிய பருத்தி விதைகளை வாங்கும்போது உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டும் விதைகளை வாங்க வேண்டும்.

விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபாா்த்து விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் ஆகிய விவரங்களையும் சரிபாா்க்க வேண்டும். மேலும், விதைகளை வாங்கும் முன்னா் அந்த விதைக்கான வயலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கையினை கேட்டு சரிபாா்ப்பது அவசியமாகும். அவ்வாறு வாங்கப்படும் விதைகளுக்கு கட்டாயம் உரிய விற்பனை ரசீதை பெற்றுக் கொள்ளவும்.

விதைகளின் தரத்தை தருமபுரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த நிலையத்தில் பரிசோதனைக் கட்டணமாக ரூ. 30 செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்து தரமான விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com