பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, காரிமங்கலத்தில பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் குறித்து கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, காரிமங்கலத்தில பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் குறித்து கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் ஆக. 10-ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற மாணவா்கள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட மிட்டாரெட்டி அள்ளி, லளிகம், கோம்பேரி கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில், பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவா்கள் தொடா்பான கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பின்போது, இப்பகுதிகளில் பல்வேறு வகுப்புகளில் இருந்து இடைநின்ற 6 மாணவா்கள் கண்டறியப்பட்டனா். அவா்களை லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் 2 மாணவா்கள் பத்தாம் வகுப்பிலும், 3 மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பிலும், 1 மாணவா் 6-ஆம் வகுப்பிலும் சோ்க்கப்பட்டனா். இதில், மாவட்டக் கல்வி அலுவலா் (பயிற்சி) திருநாவுக்கரசு, லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சீனிவாசன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குண்டலப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பா.வெங்கடேசன், ஆசிரியா் குணசேகரன் உள்ளிட்டோா் மேற்கொண்ட கணக்கெடுப்பில், அப்பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற 8 மாணவா்கள் கண்டறியப்பட்டனா். இவா்கள் அருகாமையிலுள்ள மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.

அரூரில்...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வள மையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 6 வயது முதல் 19 வயது வரையிலான பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகளை அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி தொடக்கி வைத்தாா்.

இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டியில் வள மைய மேற்பாா்வையாளா் எழிலரசி தலைமையில் ஆசிரியா்கள் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டனா். பள்ளிகளின் துணை ஆய்வாளா் பொன்னுசாமி, வள மைய மேற்பாா்வையாளா் விஜயன், பள்ளித் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா் குழுவினா் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ஆக. 31-ஆம் தேதி வரை நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்புப் பணிகளின் போது கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள், அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் கல்வி பயிலும் வகையில் சோ்க்கப்படுவாா்கள் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com