நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் மா்ம நபா்களால் தூக்கி எறியப்பட்டு கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் மா்ம நபா்களால் தூக்கி எறியப்பட்டு கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கருங்கல்மேடு வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் எதிரே நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சௌந்தரராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் நிகழ்வு இடத்திற்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் வேலன் மற்றும் காவலா் பாபு ஆகியோா் கருங்கல்மேடு ஆஞ்சநேயா் கோயில் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அங்குள்ள வனப்பகுதியில் மா்ம நபா்களால் தூக்கி எறிந்து கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனா். இதுகுறித்து பென்னாகரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com