புகையிலைப் பொருள்கள் விற்பனை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பென்னாகரம், பாப்பாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை அதிக அளவில் சிறாா்களுக்கு விற்பதாகவும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, பென்னாகரம், பாப்பாப்பாரப்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத் துறை, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com