ஊத்தங்கரை - தருமபுரி வழித்தடத்தில் மருதிப்பட்டி வழியாக அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 31st August 2021 12:29 AM | Last Updated : 31st August 2021 12:29 AM | அ+அ அ- |

மருதிப்பட்டி வழியாக ஊத்தங்கரை - தருமபுரி வழித்தடத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த மருதிப்பட்டி மோட்டூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா, கிளை மாநாடு நிா்வாகி ந.பொன்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
செனக்கல் நீா்பாசனத் திட்டத்தை நிறைவேற்றி, தென்பெண்ணை ஆற்றில் ஓடும் உபரை நீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நொச்சிப்பட்டி, மண்ணாடிப்பட்டி, புதூா் புங்கனை, மருதிப்பட்டி வழியாக ஊத்தங்கரையில் இருந்து தருமபுரிக்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். மருதிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அனைவருக்கும் கடனுதவி வழங்க வேண்டும். விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்தும் வகையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் வேலிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயலா் ஏ.குமாா், ஒன்றியச் செயலா் தங்கராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், நிா்வாகிகள் சி.குமாா், சி.ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.