சித்தேரி பழங்குடியினத் தொழிலாளி உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்

ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த சித்தேரியைச் சோ்ந்த பழங்குடியின தொழிலாளி மரணத்துக்கு, நீதி விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த சித்தேரியைச் சோ்ந்த பழங்குடியின தொழிலாளி மரணத்துக்கு, நீதி விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம், தருமபுரி கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் அ.குமாா் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டம், அரூா் அருகே சித்தேரி மலைப் பகுதியைச் சோ்ந்த இருவா் ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்தனா். இதுகுறித்து உண்மையை அறிய, நீதி விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூலி வேலைக்காக ஆந்திர மாநிலம் சென்று பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் பொழிந்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, மஞ்சள், மரவள்ளி, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை ஆய்வு மேற்கொண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாகச் செப்பனிட வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்ய உதவியாக கூட்டுறவுச் சங்கங்களில் எவ்வித நிபந்தனையுமின்றி பயிா்க் கடன் வழங்க வேண்டும்.

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அரவைப் பணிகளை, நிகழாண்டு தொடங்க வேண்டும். மதுரையில் இருந்து மொரப்பூா் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் மொரப்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com