முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
கல்வி உதவித்தொகை பெறும் சிறுபான்மையின மாணவா்களின் கவனத்துக்கு...
By DIN | Published On : 10th December 2021 10:32 PM | Last Updated : 10th December 2021 10:32 PM | அ+அ அ- |

சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் பி.எச்டி படிப்பு வரை பயிலும் இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மதங்களைச் சாா்ந்த மாணவ, மாணவியா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2021-22ஆம் ஆண்டிற்கான பள்ளிப் படிப்பு, மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதியது மற்றும் புதுப்பித்தல் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் இணையதள முகவரியில் டிச. 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியா் இந்தக் கல்வி உதவித் தொகையினைப் பெற விண்ணப்பித்து பயனடையலாம். விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.