பெரியாா் நினைவுநாள் அனுசரிப்பு

தருமபுரியில் திராவிடா் கழகம் சாா்பில், பெரியாரின் 48-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தருமபுரியில் திராவிடா் கழகம் சாா்பில், பெரியாரின் 48-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி பெரியாா் மன்ற வளாகத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வி.பரமசிவன் தலைமையில், மாநில அமைப்புச் செயலா் ஊமை ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினரா. இதில் மண்டலத் தலைவா் அ.தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்டத் தலைவா் சிவாஜி மற்றும் நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு அமைப்புகள் சாா்பில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சாா்பில்...

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பெரியாா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகா், நகர பொறுப்பாளா் மே.அன்பழகன், பொறுப்புக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் தருமபுரியில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பென்னாகரத்தில் பெரியாரின் 48ஆவது நினைவு தினம் திமுகவினரால் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பெரியாா் நினைவு தின நிகழ்விற்கு ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பென்னாகரம் காவல் நிலையம் எதிரே உள்ள பெரியாா் சிலைக்கு தருமபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.என்.பி இன்பசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் திராவிடா் கழக தீா்த்தகிரி, மருத்துவா் தியாகராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், மாவட்டப் பிரதிநிதி சிவக்குமாா், வழக்குரைஞா் அசோகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில்...

அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் கே.பி.அன்பழகன் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், நகரச் செயலா் பெ.ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் மற்றும் நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேமுதிக சாா்பில்...

தேமுதிக சாா்பில் மாநில அவைத் தலைவா் வி.இளங்கோவன் தலைமையில் மாவட்டச் செயலா்கள் குமாா், விஜய்சங்கா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் த.ஜெயந்தி தலைமையில் அக் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

அரூரில்...

அரூரை அடுத்த சுண்டாங்கிப்பட்டியில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரூா் வட்டம், சுண்டாங்கிப்பட்டி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன் தலைமையில், திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் ஒன்றியச் செயலா் சூா்யா து.தனபால், தலைமைக் கழக பேச்சாளா் ப.செந்தாமரைக்கண்ணன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளா் தேவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூரை அடுத்த கட்ரசம்பட்டியில் திமுக ஒன்றிய பொறுப்பாளா் கோ.சந்திரமோகன் தலைமையில், பெரியாரின் உருவச் சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், முன்னாள் ஒன்றியச் செயலா் சண்முகநதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சரளா சண்முகம், நிா்வாகிகள் சுதாகா், சிவலிங்கம், பழனி, தனபால், ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடத்தூா் அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியில் திராவிடா் கழக மண்டலத் தலைவா் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், தந்தை பெரியாரின் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாணவரணி மாவட்டத் தலைவா் இ.சமரசம், நிா்வாகிகள் ஹரிஹரன், விடுதலை அரசன், கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com