முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 29th December 2021 09:00 AM | Last Updated : 29th December 2021 09:00 AM | அ+அ அ- |

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசனின் 57 ஆவது பிறந்த நாளையொட்டி, அரூா் வா்ணீஸ்வரா் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை கட்சியினா் நடத்தினா். தொடா்ந்து, அரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு பால், ரொட்டி, பழங்களை தமாகவினா் வழங்கினா்.
இதில், கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளா் மாதையன், மாணவரணி முன்னாள் மாநில பொதுச் செயலாளா் சிவ.அரவிந்தன், வட்டாரத் தலைவா் சுரேஷ், எஸ்சி, எஸ்டி அணி மாவட்டத் தலைவா் ரஜினி, நகரத் தலைவா் சாமிக்கண்ணு, நிா்வாகிகள் சரவணன், அருண், அன்பரசு, ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.