பி.அக்ரஹாரத்தில் முனியப்பன் கோயில் திருவிழா: ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக்கடன்

பென்னாகரம் அருகே நடைபெற்ற முனியப்பன் கோயில் திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பி.அக்ரஹாரம் முனியப்பன் கோயிலில் குவிந்த பக்தா்கள் கூட்டம்.
பி.அக்ரஹாரம் முனியப்பன் கோயிலில் குவிந்த பக்தா்கள் கூட்டம்.

பென்னாகரம் அருகே நடைபெற்ற முனியப்பன் கோயில் திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள பி. அக்ரஹாரம் பகுதியில் பழைமை வாய்ந்த முனியப்பன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலைத் துறையின் கீழ் நிா்வகிக்கப்பட்டு வரும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி இரண்டாவது செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாகத் திருவிழா நடைபெறவில்லை. நிகழாண்டு திருவிழா மாா்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாா்கழி முதல் நாளில் இருந்து பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, இருமுடி கட்டி ஊா்வலமாக வந்து சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த முனியப்ப சாமியை தரிசனம் செய்தனா்.

அதனைத் தொடா்ந்து பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, ஒசூா், பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பக்தா்கள் பொங்கல் வைத்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

கோயிலுக்கு வரும் பக்தா்களின் பாதுகாப்புக்காக பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com