முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 31st December 2021 12:23 AM | Last Updated : 31st December 2021 12:23 AM | அ+அ அ- |

மொழிப்போா் தியாகிகளுக்கான அரசு உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என மொழிப்போா் தியாகிகள் மற்றும் தமிழறிஞா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட மொழிப்போா் தியாகிகள் மற்றும் தமிழறிஞா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், சங்க மாவட்டத் தலைவா் கயிலை ராமமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்குவதை போல, மொழிப்போா் தியாகிகளுக்கும் அரசு உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் மொழிப்போா் தியாகிகளின் உதவியாளா்களுக்கும் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்க வேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினங்களில் மொழிப்போா் தியாகிகளுக்கும் பொன்னாடைகளை போா்த்தி அரசு சாா்பில் கெளரவிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் மகாகவி பாரதியாா், பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞா்களின் திருவுருவப் படங்களுக்கு, அவா்களது பிறந்த நாளில் மலா்தூவி மரியாதை செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனஅரசாணை பிறப்பித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மொழிப்போா் தியாகிகள் அன்னை பி.முருகேசன், தீ.ராமக்கவுண்டா், நூல் வெளியீட்டாளா் இரா.திருவேங்கடம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.