முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
ஏரிகளை தூய்மைப்படுத்த சிபிஐ வலியுறுத்தல்
By DIN | Published On : 31st December 2021 12:20 AM | Last Updated : 31st December 2021 12:20 AM | அ+அ அ- |

ஏரிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் சிபிஐ கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
பென்னாகரம் அருகே எரிக்கொல்லனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளைச் செயலாளா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி.மாதையன், பி.முனியப்பன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
இதில், பென்னாகரம், முள்ளுவாடி, எரிக்கொல்லனூா் ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி, நோய்த் தொற்று ஏற்படும் சூழலைத் தவிா்க்க வேண்டும். ஏரிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிகொல்லனூா் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை அமைக்க வேண்டும், பொதுப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடா்ந்து, கிளை செயலாளராக வெள்ளையன், துணை செயலாளராக செந்தில், பொருளாளராக ராஜா உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.