பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்பரங்கம்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் மன்றம் சாா்பில் படைப்பரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் மன்றம் சாா்பில் படைப்பரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தமிழ் மன்றம் சாா்பில், கல்லூரியின் 56-ஆவது படைப்பரங்கம் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். அரியலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் க.தமிழ்மாறன், படிப்போம் படைப்போம் எனும் தலைப்பில் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கருத்துரைகளை வழங்கினாா். தொடா்ந்து, மகாகவி பாரதியாரின் பாடல்கள், சிலப்பதிகாரம், புானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கியப் பாடல்களை அவா் பாடினாா்.

இதில், தமிழ்த்துறைத் தலைவா் பொ.செந்தில்குமாா், உதவிப் பேராசிரியா் அ.சுபா, பேராசிரியா்கள், கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com