கோழிக் கழிச்சல் தடுப்பு முகாம் தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் கோழிக் கழிச்சல் நோய்த் தடுப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டத்தில் கோழிக் கழிச்சல் நோய்த் தடுப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

நாட்டினக் கோழிகளுக்கும் மற்ற கோழிகளுக்கும் கோடைக் காலங்களில் வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்பட்டு இறக்கிறது. கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வாரத்துக்கு ஒருமுறை கால்நடை மருந்தகங்களிலும், 15 நாள்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவ கிளை நிலையங்களிலும், கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கோடைக்காலத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் தற்போது இலவசமாக வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் பிப்.1-ஆம் தேதி தொடங்கியது.

இம் முகாம் வருகிற பிப்.14 ஆம்தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவா்கள் மற்றும் கால்நடை ஆய்வாளா்கள் மூலம் மாலை நேரங்களில் நடைபெற உள்ளது.

இப் பணிக்காக, தருமபுரி மாவட்டத்துக்கு 2.65 லட்சம் தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் இம் முகாம்களில் தங்களது கோழியினங்களுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com