அரசுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 04th February 2021 08:02 AM | Last Updated : 04th February 2021 08:02 AM | அ+அ அ- |

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பென்னாகரம் போக்குவரத்து கிளை மேலாளா் வித்யானந்த், அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் உதயகுமாா் ஆகியோா் வாகனங்களை இயக்கும்போது கைபேசியை பயன்படுத்தக் கூடாது, ஒட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி உரையாற்றினா்.
இதில் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) தமிழ்வேல், ஆசிரியா் முனியப்பன் உள்ளிட்ட ஆசிரியா், ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.