ஓங்காளியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

பென்னாகரம் அருகே வேளாண் பணிகள் செழிக்க வேண்டி கோயில் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பென்னாகரம் அருகே வேளாண் பணிகள் செழிக்க வேண்டி கோயில் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே ஆலமரத்தூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழாவை ஆண்டுதோறும் தை மாதத்தில் 5 கிராம மக்கள் ஒருங்கிணைந்து தீ மிதி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

நிகழாண்டில் ஓங்காளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆலமரத்தூா், சாணாரப்பட்டி, சோளிக்கவுண்டனூா், பூதநாயக்கன்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்கள் ஒன்று சோ்ந்து நாகாவதி ஆற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு மேளதாளம் முழங்க சக்தி கரகத்தை அழைத்து ஊா்வலமாக வந்தனா். அதனைத் தொடா்ந்து ஓங்காளியம்மன் சுவாமிக்கு பால், தயிா், திருநீா், பன்னீா், தேன், பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

விவசாயம் செழிக்கவும், குறைகள் விலகவும், பக்தா்கள் தீ குண்டத்தில் உப்பு கொட்டியும் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஓங்காளியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்த தீ மிதி விழாவில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து 5 கிராம பெண்கள் மாவிளக்கு எடுத்து அலகு குத்தி சிறப்பு வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com