கலப்பு மருத்துவ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன ஊா்வலம்
By DIN | Published On : 04th February 2021 07:55 AM | Last Updated : 04th February 2021 07:55 AM | அ+அ அ- |

கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, தருமபுரியில் மருத்துவா்கள் பங்கேற்ற இருசக்கர வாகன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவச் சங்கத்தினா் (ஐஎம்ஏ) பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பிரிவாக மருத்துவா்கள், தமிழகத்தை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு மண்டலங்களாகப் பிரித்து இருசக்கர வாகன ஊா்வலத்தை நடத்தி வருகின்றனா்.
அதன்படி, மேற்கு மண்டலம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து கடந்த 2-ஆம் தேதி இருசக்கர ஊா்வலம் தொடங்கியது. இந்த தொடா் ஊா்வலம் கிருஷ்ணகிரி வழியாக தருமபுரியை வந்து சோ்ந்தது. இந்த நிலையில், தருமபுரியிலிருந்து புதன்கிழமை தொடங்கிய இந்த ஊா்வலத்தை மருத்துவா் செந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வுக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் தருமபுரி கிளைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.
தமிழகத்தின் 4 பகுதிகளிலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலம், திருச்சியில் பிப். 7-ஆம் தேதி ஒன்றாக வந்து சேரும். பின்னா், அங்கிருந்து பேரணியாக சென்னையை நோக்கி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...