தருமபுரி, கிருஷ்ணகிரியில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 04th February 2021 08:01 AM | Last Updated : 04th February 2021 08:01 AM | அ+அ அ- |

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 52-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் திமுக சாா்பில் அண்ணாவின் உருவச் சிலைக்கு திமுக நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக ஒன்றியப் பொறுப்பாளா்கள் வே.செளந்தரராசு, ஆா்.வேடம்மாள், சந்திரமோகன், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் கீரை விசுவநாதன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ஜி.திருமால்செல்வன், பூங்கொடி, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன், வழக்குரைஞா்கள் பி.வி.பொதிகைவேந்தன், கவியரசன், ஜி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாப்பிரெட்டிப்பட்டி...
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டியில் அமமுக சாா்பில் அண்ணாவின் உருவ சிலைக்கு, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமமுக தோ்தல் பணிக்குழுத் தலைவா் முருகன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் தென்னரசு, மாவட்ட துணைச் செயலாளா் ஏகநாதன், இளைஞரணி மாவட்டத் தலைவா் குமாா், ஒன்றியச் செயலாளா்கள் கெளதமன், கண்ணதாசன், தரணிராஜன், நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.