தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தல்

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், ஒன்றியக் குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலன், தண்டாயுதபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில், கரோனா தீநுண்மி அறிகுறி இருப்பின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தவிா்க்க, சுற்று வட்டாரப் பகுதியை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வேளாண் பணிகளுக்கு சொட்டு நீா்ப்பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இக்கூட்டத்தில், 23 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com