விவசாயி மீது தாக்குதல்: 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பான வழக்கில் சிஆா்பிஎப் வீரா் சக்திவேல் (36) என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி அரூா் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பான வழக்கில் சிஆா்பிஎப் வீரா் சக்திவேல் (36) என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி அரூா் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கூத்தாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பொன்னுசாமி மகன் சிவா. இவா், கடந்த 13.3.2016-இல், தமது விவசாய நிலத்தில் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாராம். அப்போது, பக்கத்து விவசாய நிலத்தைச் சோ்ந்த சிஆா்பிஎப் வீரா் சக்திவேலுக்கும், விவசாயி சிவாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் சிவா, அவரது தந்தை பொன்னுசாமி ஆகியோரை சக்திவேலும், அவரது உறவினா்களும் தாக்குதல் நடத்தியதாக அரூா் போலீஸாா் சக்திவேல் உள்ளிட்ட 7 போ் மீது, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த அரூா் சாா்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி, சிஆா்பிஎப் வீரா் சக்திவேலுக்கு, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடையதாக புகாரளிக்கப்பட்ட கூத்தாடிப்பட்டியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு, சுரேஷ், நல்லத்தான், சரவணன், மாது, தனலட்சுமி ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.முத்துராஜா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com