அரூா்-மொரப்பூா் சாலையில் விபத்து பகுதியை அகலப்படுத்தக் கோரிக்கை

அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையில் விபத்து பகுதிகளில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையில் விபத்து பகுதிகளில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்- மொரப்பூா் நெடுஞ்சாலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், காரிமங்கலம், பாலக்கோடு, கம்பைநல்லூா், கடத்தூா், கல்லாவி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள், காா்கள், மினி சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் நாள்தோறும் செல்கின்றன. இவைத் தவிர, பெங்களூரு, ஆந்திர மாநிலப் பகுதியில் இருந்து அதிக பாரங்கள் ஏற்றி வரும் டாரஸ் லாரிகளும் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன.

இந்த நிலையில், அரூா்-மொரப்பூா் சாலையில் உள்ள சேவை கிராமம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தாா் சாலை மிகவும் வளைவாகவும் ஆபத்தான நிலையிலும் உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன. அண்மையில் மொரப்பூரில் இருந்து அரூா் நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எனவே, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சேவா கிராமம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தாா் சாலையின் வளைவான பகுதிகளை அகலப்படுத்தி, விபத்துகளைக் கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com