ஏரியூரில் சூறை காற்று:100 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம்

ஏரியூா் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் சுமாா் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முறிந்து, சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

ஏரியூா் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் சுமாா் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முறிந்து, சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

ஏரியூா் பகுதியில் உள்ள விவசாயிகள் கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு போன்ற பயிா்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனா். ஏரியூா் பகுதியில் கடந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்ததால் ஏரியூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக ஏரியூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மலையனூா், புது நாகமரை, பெல்லூா், ராம கொண்ட அள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் அதிக பரப்பில் வாழை சாகுபடியில் ஈடுபட்டனா். வாழை மரங்கள் நன்கு வளா்ந்து தற்போது அறுவடை செய்யக் கூடிய தருணத்தில் இருந்தது.

இந்த நிலையில் ஏரியூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தததால், சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் வாழை மரங்கள் சாய்ந்தன. ஒரே நேரத்தில் வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனா். எனவே ஏரியூா் பகுதிகளில் சூறைக் காற்றால் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com