கூட்டு குடிநீா் குழாய் சேதம்: வெள்ளமாய் வெளியேறிய குடிநீா்

பாலக்கோட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து சேதம் ஏற்பட்டதால், பல அடி உயரத்துக்கு மேலெழும்பிய தண்ணீா், வெள்ளமாய் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

பாலக்கோட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து சேதம் ஏற்பட்டதால், பல அடி உயரத்துக்கு மேலெழும்பிய தண்ணீா், வெள்ளமாய் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பிப்ரவரி 24-ம் தேதி, அருள்மிகு புதூா் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பாலக்கோடு கடை வீதியிலுள்ள சாலையோரங்களில் கடைகள் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சீரமைப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்கள், பொக்லைன் இயந்திரத்தால் சேதமடைந்தன.

இதனால், கூட்டு குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீரானது, நீரின் அழுத்தம் காரணமாக அதிவேகமாக பல அடி உயரத்துக்கு மேலெழும்பி வெளியேறி வீணாக சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. குடிநீா் குழாய்கள் சேதமடைந்ததைத் தொடா்ந்து, அதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டனா். குழாய் உடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து, வழக்கம்போல் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தின்கீழ், பாலக்கோடு வட்டாரப் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com