தருமபுரி, கடத்தூரில் 4 சிறு மருத்துவமனைகள் திறப்பு

தருமபுரி, கடத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் 4 சிறு மருத்துவமனைகளின் திறப்பு விழா நடைபெற்றது.

தருமபுரி, கடத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் 4 சிறு மருத்துவமனைகளின் திறப்பு விழா நடைபெற்றது.

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆலமரத்துப்பட்டி, அதகப்பாடி, கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில், தாளநத்தம், சில்லாரஅள்ளி ஆகிய 4 இடங்களில் சிறு மருத்துவமனைகளின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்தாா். இந்த விழாவில், உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், சிறு மருத்துவமனைகளைத் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் உள்ளூரிலேயே மருத்துவ வசதி பெறும் வகையில் இதுபோன்ற சிறு மருத்துவமனைகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. இதேபோல கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் கல்வி பெறும் வகையில் பள்ளிக்கல்வித் துறை மூலம் 14 வகையான விலையில்லாப் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். இவா்களின் நலன் கருதி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவைகளை அறிந்து அரசு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்தகையத் திட்டங்களை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதையடுத்து, பொ.துறிஞ்சிப்பட்டி பேருந்து பணிமனையில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தளம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இவ் விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) பூ.இரா.ஜெமினி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் நீலாபுரம் செல்வம், உதயா மோகனசுந்தரம், கோபாலபுரம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் விஸ்வநாதன், அரசு போக்குவரத்துத் துறை பொது மேலாளா் ஜீவரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com