பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரியை 80 சதவீதம் குறைக்க வலியுறுத்தல்

பெட்ரோலியப் பொருள்கள் மீதான அனைத்து வரிகளையும் 80 சதவீதம் குறைக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள் மீதான அனைத்து வரிகளையும் 80 சதவீதம் குறைக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே செல்வதால், விவசாயத் தொழிலாளா்கள், தொழிலாளா்கள், வணிகா்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எரிபொருள்களின் விலையேற்றத்தால், அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்கிறது. எனவே, இந்தப் பாதிப்புகளை களைய மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருள்களின் மீதான அனைத்து வரிகளையும் 80 சதவீதம் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com