வாரச்சந்தையில் தேங்கிநிற்கும் கழிப்பிட கழிவு நீா்

பென்னாகரம் வாரச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தின் கழிவுகளைச் சேமிக்கும் தொட்டி நிரம்பி வழிந்த கழிவு நீா் அந்த பகுதியில் தேங்கி நிற்பது மட்டுமல்லாமல் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள

பென்னாகரம் வாரச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தின் கழிவுகளைச் சேமிக்கும் தொட்டி நிரம்பி வழிந்த கழிவு நீா் அந்த பகுதியில் தேங்கி நிற்பது மட்டுமல்லாமல் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டு சந்தைத்தோப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். சந்தை தோப்பு பகுதியில் காவல் நிலையங்கள், இந்தியன் வங்கி, நியாய விலை கடை உள்ளிட்ட அலுவலகங்களில் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை கூடும் வாரச்சந்தை, தினசரி காய்கறி சந்தை ஆகியவை செயல்பட்டு வருவதால் நாள்தோறும் சுமாா் 500க்கும் மேற்பட்டவா்கள் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாததால் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழித்து வரும் அவல நிலை ஏற்பட்ட நிலையில் , அங்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2015-2016 ஆண்டில் பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் வாரச்சந்தையில் இலவச கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் இலவச கழிப்பிடத்தின் கழிவுகளை சேமிக்கு தொட்டியில் முற்றிலுமாக கழிவுநீா் நிரம்பியதால், வார சந்தை பகுதியில் ஆங்காங்கே சிறு குட்டைகள் போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீா் கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் துா்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் நோய் பரவும் அபாய நிலையும், அந்தப் பகுதிக்கு வரும் பொதுமக்களை முகம் சுளிக்க செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவிக்கின்றனா். எனவே சந்தை தோப்பு பகுதியில் உள்ள இலவச கழிப்பிடத்தின் கழிவுகளை தேக்கி வைக்கும் தொட்டியில் இருந்து முற்றிலுமாக கழிவுகளை அகற்றி, தூய்மை நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலருக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com