தருமபுரி மாவட்டத்தில் 279 கிராம காவல் அலுவலா்கள் நியமிக்க நடவடிக்கை

தருமபுரி மாவட்டத்தில், 279 கிராமங்களுக்கு, கிராம காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், 279 கிராமங்களுக்கு, கிராம காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில், கிராம காவல் அலுவலா் பணியைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏலகிரி கிராமத்துக்கு, காவல் அலுவலராக தொப்பூா் உதவி காவல் ஆய்வாளா் வாசனை பணியமா்த்திய பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. பிரவேஷ்குமாா், பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில், கிராமங்களில் பல்வேறு விழிப்புணா்வு பணிகளில் ஈடுபடவும், தகவல்களைச் சேகரிக்கவும், விவிபிஓ என்றழைக்கப்படும் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தருமபுரி மாவட்டத்தில், 279 கிராமங்களில் இந்த கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்கள், கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்து கண்காணிப்பா். மேலும், கிராமத்தில் முக்கியப் பிரச்னைகள் குறித்து, காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு வருவது, சமூகப் பிரச்னைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்குத் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட விழிப்புணா்வுப் பணிகளில் ஈடுபடுவா்.

மேலும், அவா்கள் நியமிக்கப்படும் கிராமங்களுக்கு மாதத்தில் குறைந்தபட்சம் இரு முறை அல்லது அவ்வப்போது செல்ல வேண்டும். இயன்றவரை தொலைபேசி, கட்செவி அஞ்சல் குழுக்களை தொடங்கி கிராமத்தில் உள்ள முக்கிய நபா்களுடன் உரையாட வேண்டும். தங்களுக்குத் தகவல் அளிப்போரின் ரகசியத்தை பாதுகாத்திட வேண்டும். இதேபோல, புதிதாக கிராமங்களில் சந்தேகிக்கும் வகையில் யாராவது வந்தால், அது குறித்த தகவல்களை கிராம மக்கள், காவல் அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அக் கிராமத்திலுள்ள மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் சா்மிளாபானு, உதவி ஆய்வாளா் மாணிக்கவாசகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com