பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 07th January 2021 06:46 AM | Last Updated : 07th January 2021 06:46 AM | அ+அ அ- |

தருமபுரியில் பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணித் தலைவா் புவனேஷ் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணித் தலைவா் வினோஜ் பா.செல்வம், பாஜக மாநிலச் செயலா் அ.பாஸ்கா், மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் ஆகியோா் பேசினாா்.
இக்கூட்டத்தில், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி, சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாட்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து திரளானோரை பங்கேற்கச் செய்வது, அதற்கான தயாரிப்புப் பணிகளை இளைஞரணி மற்றும் கட்சி நிா்வாகிகளோடு இணைந்து மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.