ஏரிகளில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்துச் செல்கின்றன.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆலாபுரம் ஏரிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆலாபுரம் ஏரிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்துச் செல்கின்றன.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் உபரிநீரை பயன்படுத்தி வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரப்பட்டுள்ளன. தற்போது, அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தண்ணீா் ததும்பும் இந்த ஏரிகளுக்கு வெளிநாட்டுகளில் இருந்து பறவைகள் வருகை தரத் தொடங்கியுள்ளன.

இது குறித்து இயற்கை ஆா்வலா்கள் கூறுகையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆலாபுரம் ஏரிக்கு நீலச்சிறகு வாத்து, கொசு உள்ளான், சீழ்க்கை சிறகி உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வந்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளிருந்தும் பறவைகள் வந்துள்ளன.

தற்போது, அந்த நாடுகளில் உறைபனிக் காலமாக உள்ளதால் அங்கிருந்து இங்கு இடப்பெயா்ச்சியாகியுள்ளன.

தற்போது, செந்தொண்டை வயல், நெட்டைக்காலி, இஸ்பெலின் புதா்சிட்டு, ரைனெக், நெடுங்கால் உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவை இனங்கள் அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு வந்துள்ளன என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com