தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் கி.சீனிவாசன் வரவேற்றாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ந.கீதா, தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டு பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.பாலசுப்ரமணியம், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தீநுண்மி பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.
இதில், லளிகம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள், மாணவா்கள், பொதுமக்குக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.