கருக்கம்பட்டியில் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.2.05 கோடி கடனுதவிகள்

தருமபுரி மாவட்டம், கருக்கம்பட்டியில் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2.05 கோடி கடனுதவிகளை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், கருக்கம்பட்டியில் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2.05 கோடி கடனுதவிகளை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினாா்.

காரிமங்கலம் அருகே கருக்கம்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் சு.ப.காா்த்திகா தலைமையில் கடனுதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், 260 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 2.05 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கி உயா்கல்வி, வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்திலுள்ள, 7 வட்டங்களிலும் 2020-ஆம் ஆண்டில் 23,017 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பா் மாதம், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பெறும் தகுதி உடைய அனைத்துப் பயனாளிகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 தொழிலாளா்களுக்கும் வேட்டி, துண்டு, சேலை, பச்சரிசி, 2 கிலோ பாசிப் பருப்பு, அரை லிட்டா் சமையல் எண்ணெய், ஆவின் 100 கிராம், வெல்லம் ஒரு கிலோ, ஏலக்காய் 5 கிராம், முந்திரி 25 கிராம், உலா் திராட்சை 25 கிராம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் அமைப்புச் சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 789 நலவாரிய உறுப்பினா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள விநியோக மையங்களுக்குச் சென்று அசல் நலவாரிய பதிவு அட்டையை காண்பித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், நலவாரிய உறுப்பினா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இவ் விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராமதாஸ், கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம், தொழிலாளா் நல உதவி ஆணையா் கே.பி.இந்தியா, மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், வட்டாட்சியா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், மீனாஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com