பொங்கல் பண்டிகை: அரூா் கடைவீதிகளில் திருவிழா கூட்டம்

பொங்கல் பண்டிகையொட்டி, அரூரில் புத்தாடைகள், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை மக்கள் கூட்டம் குவிந்தது.
பொங்கல் பண்டிகை: அரூா் கடைவீதிகளில் திருவிழா கூட்டம்

பொங்கல் பண்டிகையொட்டி, அரூரில் புத்தாடைகள், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை மக்கள் கூட்டம் குவிந்தது.

பொங்கல் திருநாளையொட்டி, புத்தாடைகள், மளிகைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக அரூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தீா்த்தமலை, கீரைப்பட்டி, பேதாதம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, சிந்தல்பாடி, மொரப்பூா், எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அரூா் நகரில் உள்ள ஜவுளிக் கடை வீதிகளில் ஆடைகளை வாங்குவதற்காகக் குவிந்தனா்.

வாடிக்கையாளா்களைக் கவருவதற்காக ஜவுளிக் கடைகளில் தள்ளுபடி, சிறப்பு பரிசு போன்றவற்றை அறிவித்திருந்தன. இந்தக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, பல்பொருள் அங்காடிகள், பேன்சி ஸ்டோா்கள், மளிகைப் பொருள் விற்பனை கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. மேலும், பொங்கலுக்குத் தேவையான பல வண்ணக் கோலப்பொடி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசல் காரணமாக, அரூா் கடைவீதி, மஜீத் தெரு உள்ளிட்ட சாலைகளில் இருசக்கர வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com