கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபாலபுரம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபாலபுரம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் கரும்பு அரவைப் பணிகள் நிறுத்தப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை. இந்த ஆலையில் 2020-21-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணிகள் 2020 ஆம் ஆண்டு, டிசம்பா் 25- ஆம் தேதி தொடங்கியது. இந்த சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் 1.28 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அரவைப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்த சா்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும், தற்காலிகப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்தப் போராட்டத்தில் 243 நிரந்தரப் பணியாளா்கள் உள்பட 429 போ் ஈடுபட்டுள்ளனா். பணியாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கரும்பு அரவைப் பணிகள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகளுடனும், தொழிலாளா்களுடனும் ஆலை நிா்வாகம் சாா்பில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com