பென்னாகரம் சந்தையில் ஆடுகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

பென்னாகரம் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கவும், ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக
பென்னாகரம் சந்தையில் ஆடுகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

பென்னாகரம் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கவும், ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பென்னாகரம் சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தையில் பழம், வெல்லம், மளிகை பொருள்கள், காய்கறிகள், மண்பாண்டங்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல வகையான பொருள்களையும், ஆடு, கோழிகளை வாங்கி செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிகின்றனா். இந்த வாரச்சந்தைக்கு பென்னாகரம் மட்டுமின்றி ஏரியூா், சின்னம்பள்ளி, தாசம்பட்டி, ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பாகரை, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது வளா்ப்பு ஆடு, கோழிகளை விற்பதற்காகவும், வாங்கிச் செல்வதற்காகவும் வருகின்றனா்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகைக்கு முன்னா் கூடும் வாரச்சந்தை என்பதால் வழக்கத்தை விட ஏராளமானோா் குவிந்தனா். பென்னாகரம் வாரச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 5 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ. 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

விலை உயா்வையும் பொருள்படுத்தாத மக்கள் ஆடுகளை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண்பாண்டங்களை ரூ. 50 முதல் 200 வரையிலும், நாட்டு வெல்லம் கிலோ ரூ. 50 க்கும், மாட்டு பொங்கலையொட்டி கால்நடைகளை அலங்கரிப்பதற்காக அணிவிக்கும் கயிறு, சலங்கை, சங்கிலிகள் உள்ளிட்டவற்றையும் மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

வாரச் சந்தையில் மக்கள் அதிக அளவில் கூடியதால் இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com