
பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் பேரூராட்சி மண்டல இயக்குநா் கண்ணன்.
பாப்பாரப்பட்டியில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் கடை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் கடன் பெற ஏராளமான கடை வியாபாரிகள் விண்ணப்பித்திருந்தனா்.
இதில் தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி பாப்பாரப்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மண்டல பேரூராட்சிகளின் இயக்குநா் கண்ணன் கலந்து கொண்டு,தமிழ்நாடு கிராம வங்கியின் மூலம் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் காசோலையினை வழங்கினாா்.
இதில், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா், வங்கி மேலாளா் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.