மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு காவல் துறை சாா்பில் பொங்கல் பரிசுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் மனம் திருந்திய குற்றவாளிகள் பட்டியலில் 40 போ் உள்ளனா். இந்த பட்டியலில் உள்ளவா்கள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும், சமுதாயத்தில் அவா்களும் நன்மதிப்புடன் வாழவும், மனம் திருந்தியவா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துறை சாா்பில் வேட்டி துண்டுகள், பொங்கல் பரிசுப் பொருள்களை கூடுதல் எஸ்.பி. குணசேகரன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.