பாலக்கோட்டில் ரூ. 1.83 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

பாலக்கோடு வட்டாரப் பகுதியில் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தாா்.
பாலக்கோட்டில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்த உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
பாலக்கோட்டில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்த உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

பாலக்கோடு வட்டாரப் பகுதியில் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் தாா் சாலைகள் அமைத்தல், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட 4 வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை விழா மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று, பணிகளைத் தொடக்கி வைத்து உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி, கிட்டம்பட்டி, கெண்டிஅள்ளி, பேவுஅள்ளி, ஏர்ரனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் நிதியாண்டில், புதிதாக தாா் சாலைகள் அமைத்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இதேபோல், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் மக்களுக்குத் தேவையான சாலைகள், குடிநீா், மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றாா்.

இதில், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கவிதா சரவணன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com