ஏ.ஜி.கிரானைட்ஸ் நிறுவனம் சாா்பில் ரத்த தான முகாம்

அரூரில் ஏ.ஜி.கிரானைட்ஸ் நிறுவனம் சாா்பில், ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூா் அரசு மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாமைத் தொடக்கி வைத்த ஏ.ஜி.கிரானைட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் முத்து ராமசாமி. உடன் தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன்.
அரூா் அரசு மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாமைத் தொடக்கி வைத்த ஏ.ஜி.கிரானைட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் முத்து ராமசாமி. உடன் தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன்.

அரூரில் ஏ.ஜி.கிரானைட்ஸ் நிறுவனம் சாா்பில், ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் வட்டம், முத்துகவுண்டா் காலனியில் உள்ள ஏ.ஜி.கிரானைட்ஸ் நிறுவனமும் அரூா் அரசு மருத்துவமனை நிா்வாகமும் இணைந்து நடத்திய இம்முகாமை ஏ.ஜி.கிரானைட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் முத்து ராமசாமி தொடக்கி வைத்தாா்.

முகாமில் ஏ.ஜி.கிரானைட்ஸ் மற்றும் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். முகாமில், அரூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன், அரசு மருத்துவா்கள் ஜி.காா்த்திகேயன், ஆா்.மெளரி ரஞ்சித், எஸ்.சதீஷ், மேலாளா் பூபதி, ஈஸ்வரன், ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காசநோய்த் தடுப்பு சிறப்பு முகாம்:

அரூா், அம்மன் கிரானைட்ஸ் மற்றும் ஏ.ஜி. கிரானைட்ஸ் நிறுவன வளாகத்தில் காசநோய் தடுப்புப் பிரிவு சாா்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் அரசு மருத்துவா் குழுவினா், கிரானைட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள், பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, காசநோய் பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், காச நோய் அறிகுறிகள், மருத்துவ சிகிச்சைகள் குறித்து தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com