கீழ்மொரப்பூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்கக் கோரிக்கை

கீழ்மொரப்பூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கீழ்மொரப்பூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரூா் (வடக்கு) ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மூவேந்தன், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது கீழ் மொரப்பூா் கிராம ஊராட்சி. எச்.ஈச்சம்பாடி-மருத்திப்பட்டி சாலையில் அமைந்துள்ள கீழ்மொரப்பூா் ஊராட்சியில் பறையப்பட்டி, கீழ்மொரப்பூா், தாமலேரிப்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்கள் அதிக மக்கள்தொகை கொண்ட கிராமங்களாகும். இதைத் தவிர, கீழ்மொரப்பூா் ஊராட்சியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மருதிப்பட்டி, எம்.வெளாம்பட்டி, எச்.ஈச்சம்பாடி, கணபதிப்பட்டி, மத்தியம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப் பகுதியிலுள்ள மக்கள் தங்கள் உடல்நலப் பிரச்னைகளுக்கு 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கொங்கவேம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரூா் அரசு மருத்துவமனைக்கோ செல்லும் நிலையுள்ளது.

எனவே, ஆரம்பநிலை மருத்துவ சிகிச்சைக்காக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கீழ்மொரப்பூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com