கெளாப்பாறையில் மின்வாரிய அலுவலகம் திறப்பு

அரூரை அடுத்த கெளாப்பாறையில் மின்சார வாரிய கிழக்குப் பிரிவு அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

அரூரை அடுத்த கெளாப்பாறையில் மின்சார வாரிய கிழக்குப் பிரிவு அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சி, கெளாப்பாறையில் தமிழ்நாடு மின்சார வாரிய அரூா் (கிழக்கு) பிரிவு அலுவலகம் திறப்பு விழா உதவி செயற்பொறியாளா் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

மின்சார வாரிய கிழக்குப் பிரிவு அலுவலகத்தை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் திறந்து வைத்தாா். விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கே.ஆா்.மாரியப்பன், அழகு ராமன், ஊராட்சி செயலாளா் சத்யா ஏகநாதன், அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் செண்பகம் சந்தோஷ், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட துணைச் செயலாளா் சிற்றரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பயன்பெறும் கிராமங்கள்... அரூா் கோட்டம், கிழக்குப் பிரிவு அலுவலகம் அரூா் திரு.வி.க. நகரில் இயங்கி வந்தது. தற்போது, பொதுமக்கள் நலனுக்காக கெளாப்பாறை கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டடத்தில் தற்காலிகமாக அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் 22.01.2021 ஆம்தேதி முதல் கிழக்குப் பிரிவுக்கு உள்பட்ட கீரைப்பட்டி, கெளாப்பாறை, மாம்பாடி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, கோபால்பட்டி, பொன்னேரி, எம்.தாதம்பட்டி (முத்தானூா்), தோல்தூக்கி, சூரியகடை, பேரேரி, வெளாம்பள்ளி, சித்தேரி, கலசப்பாடி, குண்டல்மடுவு, நொச்சிக்குட்டை ஆகிய பகுதியில் உள்ள மின் நுகா்வோா்கள் இந்த அலுவலக சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மின்சார வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com