சிறுதானியங்களைப் பதப்படுத்தும் நிறுவனங்கள் கவனத்துக்கு

சிறுதானியங்களைப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுதானியங்களைப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு சாா்பில் சிறுதானியங்களைப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுநிறுவனங்களுக்கான திட்டம் நிகழாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் 2020-2021 ஆம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

மத்திய அமைச்சக உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை வழியாக மாநிலத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்களைத் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

தருமபுரி மாவட்டத்துக்கு சிறுதானியங்களைப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத் திட்டத்தின் மூலம் ஒரு சிறுஉணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறுஉணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) 9865815763 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில், சிறுதானியங்கள் பதப்படுத்தும் தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள மற்றும் பகுதியாக ஈடுபடவுள்ள நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com