பென்னாகரத்தில் நெல் அமோக விளைச்சல்: இயந்திர அறுவடையில் ஆா்வம்

பென்னாகரம் பகுதியில் விளைந்துள்ள நெல்கதிா்களை இயந்திரங்களின் மூலம் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பென்னாகரம் பகுதியில் விளைந்துள்ள நெல்கதிா்களை இயந்திரங்களின் மூலம் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பென்னாகரம் பகுதியில் பெரும்பாலும் புன்செய் நிலங்களே அதிகமாக காணப்படுகின்றன. பெரும்பாலும் மேட்டுநிலங்களாக உள்ளதால் பருவமழை சரிவர பெய்தால் மட்டுமே வேளாண் பணிகளை விவசாயிகள் மேற்கொள்வா். பருவ மழை காலத்தில் போதிய மழை பெய்யாவிடில், இப்பகுதியைச் சோ்ந்த பல விவசாயிகள் வேலைத் தேடி அண்டை மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிா்பாா்த்ததைக் காட்டிலும் கூடுதலான மழை பெய்ததால் பென்னாகரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியதுடன், நிலத்தடி நீா்மட்டமும் அதிகரித்தது.

குறிப்பாக பென்னாகரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாசம்பட்டி, கோடு பட்டி, பி.அக்ரஹாரம், மடம், ஏரியூா் சின்னம்பள்ளி பெரும்பாலை, பாப்பாரப்பட்டி போன்ற கிராமப் பகுதிகளில் வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்தனா். தரிசாக காணப்பட்ட நிலங்களில், நீண்ட இடைவெளிக்குப்பின் நெல் சாகுபடி நடைபெற்ால் விவசாயிகள் உற்சாகத்துடன் வேளாண் பணிகளில் மும்முரம் காட்டினா்.

தற்போது பெரும்பாலான நிலங்களில் நெல்பயிா் முற்றி அறுவடைக்குத் தயாராக உள்ளதால் இவற்றை இயந்திரங்களின் மூலம் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியதாவது:

பென்னாகரம் பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்ததால், நெல் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆா்வம் கொண்டனா். பெரும்பாலான விவசாயிகள் குறுகிய காலப் பயிரான அம்மன் பி.டி, ஐ. ஆா்- 20, ஐ.ஆா்- 30 ரக நெற்பயிா்களையும், இட்லி குண்டு நெல்லையும் அதிக அளவில் பயிரிட்டனா். தற்போது விளைந்து முற்றி நிற்கும் நெல்கதிா்களை இயந்திரங்கள் மூலமாகவே அறுவடை செய்கின்றனா். விவசாய தொழிலாளா்களை வைத்து அறுவடை செய்வதால் நேரமும், பணிச்சுமையும் குறைகிறது. ஆள் கூலியை விட குறைந்த செலவில் அறுவடை செய்யலாம் என்பதால் இயந்திர அறுவடையில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com