‘தீ’ செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் ‘தீ’ செயலி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம்: பென்னாகரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் ‘தீ’ செயலி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் தலைமை வகித்தாா். இதில் ‘தீ’ செயலியைப் பதிவிறக்கம் செய்து காண்பித்து அதை அவசர மற்றும் பேரிடா் காலங்களில் பயன்படுத்தும் முறை, தகவல் தெரிவிப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அரசு பெண்கள் பள்ளி, பேருந்து நிலையம், கடமடை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தியும், வணிக வளாகம், திரையரங்கம் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் ‘தீ’ செயலி குறித்து விழிப்புணா்வு பதாகைகள் வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com