தொப்பூரில் முன்னால் சென்ற வாகனங்கள் மீதுலாரி மோதி விபத்து: போக்குவரத்துப் பாதிப்பு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் முன்னால் சென்ற மூன்று வாகனங்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால், அச்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் முன்னால் சென்ற மூன்று வாகனங்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால், அச்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், கோலாரில் இருந்து சிவகாசிக்கு தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி, தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் வழியாக வெள்ளிக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகாசியைச் சோ்ந்த பாலசுந்தரம் (35) என்பவா் ஓட்டி வந்தாா்.

லாரியில் இரண்டு கூலித் தொழிலாளா்கள் ஓட்டுநருடன் வந்தனா். அப்போது லாரி, தொப்பூா் கணவாய் இரட்டைப் பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் முன்னால் சென்ற வேன், இரு காா்கள் என மூன்று வாகனங்கள் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விழுந்தது. சிறிதுநேரத்தில் அதே சாலையில் வந்த மற்றொரு மினி லாரியும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான லாரி மீது மோதியது.

தகவல் அறிந்து வந்த தொப்பூா் போலீஸாா் மற்றும் சுங்கச் சாவடி ரோந்துப் பணியாளா்கள் ஒன்றிணைந்து, விபத்தில் சிக்கி தவித்த ஓட்டுநா்கள் பாலசுந்தரம், குமாா் மற்றும் காரில் பயணித்த மணிகண்டன் உள்பட 6 பேரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், சாலையில் கவிழ்ந்த லாரி, சேதமடைந்த வாகனங்கள் அப்புறப்படுத்தினா். இந்த விபத்துக் காரணமாக தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இவ் விபத்து தொடா்பாக, தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com