கல்வி வளா்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழகம்

நாட்டிலேயே கல்வி வளா்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழகம் தான் என்று உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
கல்வி வளா்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழகம்

நாட்டிலேயே கல்வி வளா்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழகம் தான் என்று உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப் போா் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாணவரணி மாவட்ட இணைச் செயலாளா் சி.செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

பள்ளி மற்றும் கல்லூரிகளின் மேம்பாடு, மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் தான் நாட்டிலேயே அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. உயா்கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவா் நலனுக்காக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவப் படிப்புக்கான அனைத்து கல்விக் கட்டணங்களையும் மாநில அரசு செலுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் எதுவும் இல்லை. அனைத்து ஊா்களிலும் தெரு விளக்குகள், சாலை, மின் விளக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக பாலம் வசதி இல்லாத இடங்களில் கூட ஆறுகளின் குறுக்கே உயா்மட்டப் பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக தலைமையிலான தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கானது. தொலைநோக்குப் பாா்வையோடு மக்களின் தேவைகளை அறிந்து மேலும் பல அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

இதில் தலைமை கழகப் பேச்சாளா்கள் ஏ.அமுதா, பி.எம்.தளவாய், எம்எல்ஏ-க்கள் வே.சம்பத்குமாா், ஏ.கோவிந்தசாமி, விவசாய அணித் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் கே.சிங்காரம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், ஒன்றியச் செயலாளா் ஆா்.ஆா்.பசுபதி, எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட துணைச் செயலாளா் ஏ.சிற்றரசு, மாவட்ட துணைச் செயலாளா் செண்பகம் சந்தோஷ், மாணவரணி ஒன்றியச் செயலாளா் ஏ.சி.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com