தருமபுரி குடியரசு தின விழா கொண்டாட்டம்

தருமபுரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 290 பேருக்கு நற்சான்றுகள் வழங்கப்பட்டது.

தருமபுரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 290 பேருக்கு நற்சான்றுகள் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல் துறை அணிவகுப்பை பாா்வையிட்டு, அவா்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதன்பின்பு, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களை வானில் பறக்க விட்டாா்.

மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல் துறையினா், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட பணியாற்றிய சுகாதாரத் துறையினா், மருத்துவா்கள், கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 290 பேருக்கு பதக்கமும், நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, இணை இயக்குநா்கள் திலகம் (நலப் பணிகள்), வசந்தரேகா (வேளாண்மை), துணை இயக்குநா்கள் பூ.இரா.ஜெமினி (சுகாதாரம்), மாலினி (தோட்டக்கலை) இணைப் பதிவாளா் ராமதாஸ் (கூட்டுறவு) உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா். நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com